குடியாத்தம் வள்ளலார் அன்னமுது குடில் சார்பில் முப்பெரும் விழா (24/05/2026) அன்று போடிப்பட்டை தனியார் திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
🎉 விழாக்கள்:
✨ இரண்டாம் ஆண்டு துவக்க விழா
✨ தர்ம சாலை நிறுவிய நன்னாள் விழா
✨ திருவள்ளுவர் உலகிற்கு வழங்கிய திருக்குறள் கொண்டாடும் விழா.
நிர்வாகி திருமதி. கோமதி, செயலாளர் திரு. கோதண்டபாணி, பொருளாளர் திரு. பூபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் திரு. பிரதீப் வரவேற்புரை வழங்கினார்.
🌟 சிறப்பு விருந்தினர்:
குடியாத்தம் நகர் மன்றத் தலைவர் திரு. எஸ். சௌந்தரராஜன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
📚 மாணவர் பாராட்டு:
குடியாத்தம் வட்டாரத்தில் 10 மற்றும் +2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்த மாணவச் செல்வங்களுக்குப் பாராட்டுச் சான்றுகள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். 🎁👏
இறுதியில் துணைச் செயலாளர் திரு. முரளி நன்றி தெரிவித்தார்.
📝 தகவல்:
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் – கே. வி. ராஜேந்திரன்
#VallalarAnnamuthuKudil #Gudiyatham #Thirukkural #StudentAchievers #AwardCeremony #CommunityService #Education #திருக்குறள் #வள்ளலார் #மாணவர்_சாதனை
