Mon. May 25th, 2026

கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பிரபலமான லூலூ மால், இன்று வார இறுதி மற்றும் பள்ளி விடுமுறை காரணமாக பொதுமக்கள் கூட்டத்தால் நிரம்பியது. தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பல பகுதிகளில் இருந்து குடும்பத்தினரும், குழந்தைகளும் பொழுதுபோக்கிற்காக வந்திருந்தனர். இதனால் மாலை நேரங்களில் மாலுக்குச் செல்லும் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மாலில் நடைபெறும் முக்கிய நிகழ்வாக “லூலூ ஸ்பீட் சர்க்யூட் கோ-கார்ட் ரேசிங் லீடர் போர்டு” போட்டி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சுமார் 25 போட்டியாளர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். விதிமுறையின்படி, குறிப்பிட்ட சுற்றுப்பாதையை மிகக் குறைந்த நேரத்தில் பாதுகாப்பாக முடிப்பவரே வெற்றியாளர். வேகம், கட்டுப்பாடு, துல்லியமான திருப்பங்கள் ஆகியன முக்கிய அம்சங்கள்.

குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் பார்வையிட்டு ரசித்து வருகின்றனர். போட்டியாளர்களின் நேரங்கள் ‘லீடர் போர்டு’ மூலம் நேரடியாகக் காட்சிப்படுத்தப்படுகின்றன. குறைந்த நேரம் எடுப்பவர்களுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், இடையிடையே மழையும் பெய்து கொண்டிருந்தது.

· தமிழ் நாடு டுடே செய்தியாளர்: ஷாலு V. J.,

By TN NEWS