Wed. May 20th, 2026

செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்), மே 19, 2026 – செஞ்சி இ.கே.ஆர். மருத்துவமனையில் இன்று உலக குடும்ப மருத்துவர் தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இம்மருத்துவமனையின் உரிமையாளரும் தலைமை மருத்துவருமான ஏ. ஆனந்தமுருகன் மற்றும் அவரது மருத்துவக் குழுவினர், மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர்களாகவும், உயிர் காக்கும் உன்னத படைப்பாளிகளாகவும் திகழ்கின்றனர்.

இந்நிகழ்வில், சமூக ஆர்வலரும், பாரத்மித்ரன் சமூக பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை மாநில ஒருங்கிணைப்பாளருமான அகலூர், அ. ஜோலாதாஸ் அவர்கள், தமது குடும்ப நல மருத்துவராகச் சிறப்பாகப் பணியாற்றும் இ.கே.ஆர். மருத்துவமனைக் குழுவினர் அனைவருக்கும் பச்சை நிறச் சால்வை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் கௌரவித்து வாழ்த்தினார்.

மேலும், தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க வல்லம் ஒன்றியச் செயலாளர் ராமமூர்த்தி, இயற்கை விவசாயி முரளிகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடனிருந்து வாழ்த்துரைகள் வழங்கினர்.

வாழ்த்துப் பெற்றவர்கள்:

· மருத்துவர்கள்: மருத்துவர் இம்தாத் (MBBS), ஆர்த்தோ மருத்துவர் விக்னேஷ் (MS)
· மருத்துவமனை ஊழியர்கள்: கணக்காளர் ரம்யா, ராக்க்ஷித், மருந்தக உதவியாளர்கள் வளர்மதி, சதீஷ், ரஞ்சித்
· தலைமைச் செவிலியர்: சோணியா
· செவிலியர்கள்: மனோசித்ரா, நர்மதா, நாராயணி, அர்ச்சணா, சுஜாதா, புவனேஸ்வரி

நிகழ்வின் இறுதியில், மருந்தக உதவியாளர் குமரவேல் நன்றி கூறினார்.

சக்திவேல் விஜயன், விழுப்புரம் மாவட்டச் செய்தியாளர்

By TN NEWS