Fri. May 15th, 2026

பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆயிரக்கணக்கில் உணவு வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் பிரசித்தி பெற்ற கங்கை அம்மன் திருவிழாவை முன்னிட்டு உள்ளி கூட் ரோட்டில் இரண்டாம் ஆண்டு மாபெரும் அன்னதான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த அன்னதான நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவருந்தினர்.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார். மேலும் ஊராட்சி மன்ற தலைவர்கள் குமரன், சாந்தி மோகன், சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பௌத்த சமூக கல்வி அறக்கட்டளை தலைவர் இராசி தலித் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கேத்ரின் மேரி பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானத்தை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த அன்னதான நிகழ்ச்சியில் பெண்கள், முதியோர், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் ஆர்வமுடன் பங்கேற்று உணவருந்தினர்.

கங்கை அம்மன் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் சமூக நல்லிணக்கத்துடன் அன்னதானம் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த அன்னதான நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சாமு, பாபு, ராஜேஷ், கபாலி மற்றும் பலர் செய்திருந்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுக்கா.

By TN NEWS