Fri. May 15th, 2026

மே 15, 2026 | வைகாசி 01:

வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரம் கவுண்டன்யா மகாநதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் கோவில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் முதல் நாளில் சிரசு திருவிழா! வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டும் இன்று (மே 15) திருவிழா! மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மன் தரிசனத்திற்காக குவிந்துள்ளனர்.

திருவிழா நிகழ்வுகள்:
– முன்னதாக காப்பு கட்டுதல் விழாவுடன் திருவிழா தொடங்கியது.
– நேற்று கெங்கையம்மன் தேர் திருவிழா! வெகு சிறப்பாக நடைபெற்றது.
– இன்று காலை தரணம்பேட்டை முத்தாலம்மன் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கெங்கையம்மன் சிரசு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
– குடியாத்தம் நகரின் முக்கிய சாலைகள் வழியாகச் செல்லும் அம்மன் சிரசை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.

பக்தர்கள் நேர்த்திக்கடன்:
– ஆடு, கோழி பலி
– சூரத் தேங்காய் உடைத்தல்
– புலி ஆட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைகள்

பாதுகாப்பு ஏற்பாடுகள்:
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 1200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பக்தர்கள் வருகை:
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், **ஆந்திரா, கர்நாடகா** உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மன் அருளைப் பெற்று வருகின்றனர்.

குறிப்பு: திருவிழாவை முன்னிட்டு வேலூர் மாவட்ட நிர்வாகம் குடியாத்தம் பகுதிக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.

இந்த புனித திருவிழாவில் கலந்துகொள்ள முடியாதவர்கள் அம்மன் புகைப்படத்தை பார்த்து, மனதார வணங்கி அருள் பெறலாம்.

அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் அருள் அனைவருக்கும் உண்டாகட்டும்! 🙏

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் – K.V. இராஜேந்திரன்

By TN NEWS