Wed. May 13th, 2026

சிதம்பரம், மே 13: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஓமக்குளம் பேருந்து நிலையம் அருகில், வாய்க்கால் வடிகாலில் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இதனைப் பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

🚨 நடவடிக்கை: தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிதம்பரம் நகர காவல் துறையினர், இறந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவரின் அடையாளம் கண்டுபிடிப்பது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: சிவக்குமார், சிதம்பரம்

By TN NEWS