தஞ்சாவூரில் தமிழக வெற்றி கழகம் ஆட்சியமைத்ததை முன்னிட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் 17வது பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய அரசியல் முன்னேற்றத்தைப் பதிவு செய்தது. எனினும் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான உறுப்பினர்கள் இல்லாத சூழலில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்), விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இன்று தமிழக வெற்றி கழகம் ஆட்சியமைத்தது.
மக்கள் அளித்த தீர்ப்பின்படி விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றதை வரவேற்று, தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் நகர் கிளையில் பணிபுரியும் போக்குவரத்து தொழிலாளர்கள், தவெக தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தோழமைக்கட்சியினர் இணைந்து பணிமனை முன்பு பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வின்போது “மக்கள் ஆட்சி வெற்றி பெற்றுள்ளது”, “இளைஞர்களின் நம்பிக்கை நிறைவேறியுள்ளது” என தொழிலாளர்கள் உற்சாக முழக்கங்கள் எழுப்பினர். அப்பகுதியில் கொண்டாட்டம் திருவிழா போன்று காணப்பட்டது.
செய்தியாளர்: கோ. வளங்கோவன்