Sun. May 10th, 2026

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் 2026ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வில் 97% தேர்ச்சி பெறப்பட்டுள்ளது.

மொத்தம் 468 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 452 மாணவர்கள் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பள்ளி அளவில் மாணவி ஆயிஷா சித்திகா.எஸ் 569/600 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தைப் பெற்றார். ஜெ. சுமையா 558/600 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும், ஜி. சரத் பாபு 549/600 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடமும் பெற்றனர்.

பள்ளியின் தாளாளர் தெய்வத்திரு எம்.ஜி. அமிர்தலிங்கம் அவர்களின் நல்லாசியுடன், தாளாளர் எம்.ஏ. சம்பத்குமார், செயலாளர் எம்.ஏ. சிவகுமார், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் எம்.ஏ. ஆனந்தகுமார், எம்.ஏ. விஷ்ணு சங்கர், பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு எஸ். உஷா, உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர் பணியாளர்களின் ஒத்துழைப்பால் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS