அருகே 74 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக 24 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் அருகே உள்ள ஆனகிரி சோலை பகுதியில் மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளர் வசந்த்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், உயிரிழந்தவர் பெருமாள்மலையைச் சேர்ந்த சிதம்பரத்தின் மனைவி தனபாக்கியம் (74) என்பது தெரியவந்தது. மேலும், அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, சம்பவத்தில் தொடர்புடையதாக கொடைக்கானல் மேல்மலை கிராமம் பழம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த பெரியகருப்பன் (24) என்பவரை கைது செய்தனர்.
பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் சந்திரமோகன்