Fri. May 8th, 2026

தமிழக வெற்றிக் கழகத்தில் முன்னாள் டிஜிபி  இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முக்கிய பிரமுகரும்,  தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர். நட்ராஜ் IPS, விரைவில்  அவர்களை சந்தித்து, தனது ஆதரவாளர்களுடன்  கட்சியில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்  அவர்களின் நம்பிக்கைக்குரியவராக அறியப்பட்ட ஆர். நட்ராஜ், காவல்துறை மற்றும் நிர்வாகத் துறைகளில் நீண்டகால அனுபவம் பெற்றவர்.

1975ஆம் ஆண்டு இந்திய காவல் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட இவர், தமிழ்நாடு காவல்துறை தலைவராகவும், தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டு அரசியல் மற்றும் நிர்வாகத் துறைகளில் தனித்துவமான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

வழக்கறிஞர், அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் சமூக சேவகர் என பன்முகத் தன்மையுடன் அறியப்படும் ஆர். நட்ராஜ் IPS, அ.தி.மு.க.வில் நிலவி வரும் உட்கட்சி பிரச்சினைகளால் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையக்கூடும் என கூறப்படுகிறது.

எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

ஆர். சுதாகர்
துணை ஆசிரியர்
தமிழ்நாடு டுடே

By TN NEWS