கே எம் ஜி கலை அறிவியல் கல்லூரி.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனமான கே எம் ஜி கலை அறிவியல் கல்லூரியில், புதியதாக MBA மற்றும் MCA உயர் பட்டப்படிப்புகள் இந்த கல்வியாண்டு முதல் நடத்தப்பட உள்ளது. இதற்காக All India Council for Technical Education (AICTE) அனுமதி வழங்கியுள்ளது.
இந்த முக்கிய முன்னேற்றத்தை முன்னிட்டு, குடியாத்தம் கம்பன் கழகத்தின் சார்பில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. கம்பன் கழக நிறுவனர் ஜே.கே.என். பழனி மற்றும் செயலாளர் வழக்கறிஞர் கே. எம். பூபதி ஆகியோர், கல்லூரி நிர்வாகிகள் கே எம் ஜி பாலசுப்பிரமணியம், கே எம் ஜி சுந்தரவதனம், கே எம் ஜி ராஜேந்திரன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கம் சார்பில் தலைவர் கே. சந்திரன், முன்னாள் தலைவர் சி. கண்ணன், வி.என். அண்ணாமலை, வருங்கால தலைவர்கள் டி.எஸ். ரவிச்சந்திரன், என். ஜெயச்சந்திரன், சிவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
புதிய MBA மற்றும் MCA படிப்புகள் அறிமுகமாகுவது, குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கும் முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்