Sat. May 2nd, 2026

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகம் அருகே மாவட்ட மைய நூலகக் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்திற்காக ரூ.4.01 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி முதல்வரால் காணொலி வழியாக அடிக்கல் நாட்டப்பட்டது.

புதிய நூலகம் நான்கு தளங்களுடன் கட்டப்படுகின்றது. இதில் நூலகர் லாக்கர் அறை, புத்தக வெளியீட்டு பகுதி, பெண்கள் பிரிவு, போட்டித் தேர்வு தயாரிப்பு பிரிவு போன்ற வசதிகள் அமைக்கப்படுகின்றன. மேலும் குடிநீர் சுத்திகரிப்பு வசதி மற்றும் லிப்ட் உள்ளிட்ட நவீன அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இதனுடன், நூலகத்திற்கான புத்தகங்கள் வாங்குதல், தொழில்நுட்ப சாதனங்கள், தளவாட உபகரணங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக கூடுதலாக ரூ.1.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்த இந்த மாவட்ட நூலகம், அனைத்து வசதிகளுடனும் விரைவில் புதிய கட்டிடத்தில் செயல்படத் தொடங்கவுள்ளது. இதனால் கல்வியாளர்கள், நூலக வாசகர்கள் மற்றும் அரசு தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

V. ஜெய்சங்கர்
மக்கள் தொடர்பு அதிகாரி
தமிழ்நாடு டுடே

By TN NEWS