Thu. Apr 30th, 2026

வேலூர் மாவட்டம், குடியாத்தம்: புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 136-வது பிறந்தநாளை முன்னிட்டு, குடியேற்றம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பேரவை சார்பில் சிறப்பு நிகழ்வு ஏப்ரல் 29 ஆம் நாள் நடைபெற்றது.

குடியாத்தத்தில் உள்ள பெரியார் சிலை அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பாவேந்தரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்குப் பேரவை அமைப்பாளர் வி. சடகோபன் தலைமை தாங்கினார். பேரவைத் தலைவர் த. புவியரசி வரவேற்புரையாற்றினார். பேரவை நிர்வாகிகளான கவிஞர் தூயவன், வி.ஏ. அன்பு ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திமுக நகர நிர்வாகிகளான க.கோ. நெடுஞ்செழியன், ந. ஜம்புலிங்கம், ஆ. வசந்தா ஆறுமுகம், கவிஞர் த. பாரி, பெரிய. கோட்டீஸ்வரன் ஆகியோர் சிறப்புக் கலந்து கொண்டனர்.

மேலும், பேரவை புரவலர்களான வழக்கறிஞர் எஸ். பாண்டியன், ஆசிரியர் ஜெ. தமிழ்ச்செல்வன், இரா. முத்துக்குமார், ச. ஈஸ்வரி. விஜயா, அம்சா. சுஜாதா, முனைவர் ராஜராஜன், சிவா ஆர்ட்ஸ் பரமசிவம் ஆகியோரும் உடனிருந்து பாரதிதாசனின் தமிழ்ப் பணியைப் போற்றினர்.

இவ்விழா பாவேந்தரின் இலக்கியச் சிந்தனைகளைப் புதிய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் வகையில் எளிமையாகவும், கம்பீரமாகவும் அமைந்திருந்தது.

செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுக்கா.

By TN NEWS