Wed. Apr 22nd, 2026

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவல்துறையினருக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் A. மயில்வாகனன் தலைமையில் நடைபெற்றது. தேர்தல் நடைபெறும் நாளில் சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதிப்படுத்த வேண்டிய முக்கியத்துவம் குறித்து அவர் விரிவாக விளக்கினார்.

மேலும்,

வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

பொதுமக்களுடன் நடந்து கொள்வது

தேர்தல் விதிமுறைகளை கடைப்பிடிக்கும் நடைமுறைகள்

அவசர நிலைகளை கையாளும் செயல்முறைகள்

போன்ற விடயங்கள் குறித்து காவல்துறையினருக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தென்காசி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணிபுரியும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

அமல்ராஜ், மாவட்ட செய்தியாளர், தென்காசி

By TN NEWS