Mon. Apr 20th, 2026

திண்டுக்கல்.
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் மீது சாதி பெயரை குறிப்பிட்டு வாக்கு கேட்டு பேசினார் என்ற குற்றச்சாட்டில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

📢 சர்ச்சைக்குரிய பேச்சு…?

காப்பிலியப்பட்டி பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது:

“நீங்கள் ஒக்கலிக கவுண்டர்கள்…”

“அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கொங்கு வேளாளர் கவுண்டர்…”

“கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் முதலமைச்சர் ஆகப் போகிறார்…”

என பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

🚫 தேர்தல் விதிமீறல் குற்றச்சாட்டு.

இந்திய தேர்தல் ஆணையம் விதிகளின்படி:

சாதி, மத அடிப்படையில் வாக்கு கேட்பது குற்றம்

பொதுமக்கள் முன்னிலையில் இத்தகைய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது

⚖️ BNS சட்டத்தின் கீழ் வழக்கு.

வழக்கறிஞர் வேல்முருகன் அளித்த புகாரின் பேரில்:

திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் FIR No.245/2026 பதிவு

பாரதிய நியாய சன்ஹிதா (BNS) 2023 பிரிவு 196(1) கீழ் வழக்கு
இந்த பிரிவு குறிக்கும் பொருள்:
மதம், ஜாதி, இனம், மொழி உள்ளிட்ட அடிப்படையில்
➡️ வெறுப்பு அல்லது பகைமை தூண்டுதல்

⛓️ தண்டனை விவரம்.

அதிகபட்சம் 5 ஆண்டு சிறைத் தண்டனை

சில சந்தர்ப்பங்களில் ஜாமீன் சிக்கல் உருவாக வாய்ப்பு

🧾 கூடுதல் குற்றச்சாட்டுகள்.

ஏற்கனவே:
தேர்தல் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட
பல்வேறு புகார்கள் இருந்த நிலையில்
தற்போதைய வழக்கு அரசியல் ரீதியாக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பார்க்கப்படுகிறது.

📰 செய்தியாளர்
ராமர்
திண்டுக்கல் மாவட்டம்

By TN NEWS