செஞ்சி, ஏப்ரல் 18:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக வேட்பாளர் கணேஷ் குமாரை ஆதரித்து, அஇஅதிமுக மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் 18.04.2026 அன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மாம்பழம் சின்னத்திற்கு ஆதரவு கோரி நடைபெற்ற இந்த பிரச்சார நிகழ்வில் அவர் பொதுமக்களிடம் உரையாற்றினார். அப்போது, “கணேஷ் குமார் முன்பு செஞ்சி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். அவரது பணிக்காலத்தில் எந்த குற்றச்சாட்டும் எழாத தூய்மையான இளம் அரசியல்வாதி. கூட்டணி காரணமாக மட்டும் நான் அவரை பாராட்டவில்லை; அவர் உண்மையாகவே செஞ்சி மக்களுக்காக உழைத்தவர் என்பது மக்களுக்கே தெரியும்,” என்றார்.
மேலும், “நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைவது உறுதி. அதேபோல் கூட்டணி வேட்பாளர் கணேஷ் குமார் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதும் உறுதி,” என நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து, தற்போதைய திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என்றும், பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
செய்தியாளர்:
சக்திவேல் விஜயன்,
விழுப்புரம் மாவட்ட குற்றச் செய்தியாளர்.