மசூதியில் தொழுகைக்கு பின் இஸ்லாமிய மக்களிடம் ஆதரவு கோரி பிரசாரம்.
வேலூர் | ஏப்ரல் 17
குடியாத்தம் தொகுதி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் G. சரிதா புருஷோத்தமன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று பிற்பகல் சுமார் 1 மணி அளவில், குடியாத்தம் 35வது வார்டு சுண்ணாம்பேட்டை பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்ட் மசூதியில் தொழுகையில் கலந்து கொண்ட அவர், பின்னர் அங்கு கூடியிருந்த இஸ்லாமிய மக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கோரி பிரசாரம் செய்தார்.
நிர்வாகிகள் பங்கேற்பு
இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில்:
நகரக் கழக துணைச் செயலாளர் வி.இ. கருணா
கே.வி. ராஜேந்திரன்,ஆர். செல்வம்,இம்தியாஸ்,
வட்டத் துணைச் செயலாளர் குணசேகர்,இ. மூர்த்தி, எம்.ஆர்.சேகர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தேர்தல் சூழல் தீவிரம்:
குடியாத்தம் தொகுதியில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முக்கிய வேட்பாளர்கள் அனைவரும் வாக்காளர்களை நேரடியாக சந்தித்து ஆதரவு கோரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
