கும்பகோணம், ஏப்ரல் 16:
கும்பகோணத்தில் திமுக வேட்பாளர் சாக்கோட்டை க. அன்பழகன் இன்று சூறாவளி வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இன்று காலை, மத்திய அரசு கொண்டு வர முயலும் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கூட்டணி கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் டி. குமரன், விடுதலை சிறுத்தை கட்சியின் தேர்தல் குழுத் தலைவர் வழக்கறிஞர் விவேகானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு, மசோதா நகலை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர். “தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” என்ற கோஷங்களும் முழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, கும்பகோணம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சாக்கோட்டை க. அன்பழகன் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். தாராசுரத்தில் தொடங்கிய இந்த பிரச்சாரம் சிங்காரத்தோப்பு, வன்னாங்கன்னி, மெளனசாமி மடம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக மாநகரின் பல்வேறு இடங்களில் சூறாவளி முறையில் நடைபெற்றது.
இந்த பிரச்சாரத்தில் கும்பகோணம் மாநகர செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான சுப. தமிழழகன் கலந்து கொண்டார். மேலும் 500-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆராத்தி எடுத்து, பொன்னாடை அணிவித்து, மலர்கள் தூவி, பட்டாசு வெடித்து வேட்பாளரை வரவேற்றனர்.
செய்தியாளர்: கோ. வளங்கோவன்