Mon. Apr 13th, 2026

குடியாத்தம், ஏப்ரல் 13:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே செம்பேடு ஊராட்சி பங்கரிஷி குப்பம் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில், ஆட்டோ ஓட்டுநர் உட்பட 7 பெண்கள் காயமடைந்தனர்.

அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் தினமும் அருகிலுள்ள தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்வதற்காக, 27 வயதுடைய ஆட்டோ ஓட்டுநர் கவி குமார் இயக்கிய ஆட்டோவில் பயணம் செய்து வந்துள்ளனர்.

இன்று காலை ரேணுகா (33), அனிதா (37), சத்தியவேணி (40), எஸ்தர் (27), சுஜாதா (45), கனகா (36), தீபிகா (27) உள்ளிட்டோர் வழக்கம்போல் வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் ஆட்டோ சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது.

இந்த விபத்தில், ஆட்டோவில் பயணம் செய்த அனைத்து பெண்களும் மற்றும் ஓட்டுநரும் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த ஜே.கே.என் பழனி மற்றும் பூங்கொடி மூர்த்தி ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தால் அப்பகுதியில் சில நேரம் பரபரப்பு நிலவியது.

தகவல் வழங்குபவர்:
கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்

By TN NEWS