திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகிலுள்ள கம்பளியம்பட்டி மற்றும் அம்மாபட்டி கிராமங்களில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் வழங்கப்படுவதாக மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது.
இதனைத் தொடர்ந்து, சிவராமன் தலைமையிலான நத்தம் தேர்தல் பறக்கும் படை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜு என்பவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் சாக்கு பையில் இருந்த 37 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சேலைகள் குறித்து ராஜு அளித்த விளக்கத்தில், கோவில் திருவிழாவை முன்னிட்டு பெண்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்ததாக கூறியுள்ளார்.
இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள் நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
செய்தியாளர்
இராமர்
திண்டுக்கல் மாவட்டம்
