Wed. Apr 8th, 2026

வேலூர், குடியாத்தம்:

தமிழக சட்டமன்றத் தேர்தல் – 2026 ஐ முன்னிட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அதிமுக) வேட்பாளர் ஜி. பரிதா புருஷோத்தமன் அவர்கள் இன்று 15வது வார்டு, சூரிய மஹால், வைத்தீஸ்வரன் நகர், ஆர்.எஸ். ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

நகர கழக செயலாளர் ஜே.கே.என். பழனி தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில், வேட்பாளர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை நேரடியாக சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.

இந்த நிகழ்வில் மாவட்ட கழக துணைச் செயலாளர் கஸ்பா ஆர். மூர்த்தி, வட்ட செயலாளர் சேட்டு, நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகர பொருளாளர் தனஜெயன், மாவட்ட பிரதிநிதி ஜி. தேவராஜ், நகர துணைச் செயலாளர் ஏ. ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி அட்சயா வினோத்குமார், நகர மன்ற உறுப்பினர் கோல்டு குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.

மேலும், ஏராளமான பொதுமக்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு உற்சாகத்தை ஏற்படுத்தினர்.

குடியாத்தம் செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS