பாப்பிரெட்டிப்பட்டி, ஏப்.7:
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் முனைவர் பெ. பழனியப்பன் (M.Sc., Ph.D.), இன்று தொகுதிக்குட்பட்ட இருளப்பட்டி, அ.பள்ளிப்பட்டி மற்றும் அதிகாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
காலை முதலே கழக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்த அவர், “உதயசூரியன்” சின்னத்திற்கு வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். வீடுகள் தோறும் சென்று வாக்கு சேகரித்ததுடன், அரசின் செயல்திட்டங்கள் மற்றும் எதிர்கால வளர்ச்சி நோக்கங்களை மக்களிடம் விளக்கினார்.
ஒவ்வொரு பகுதியிலும் பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மலர்மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். “வெற்றிச் சின்னம் உதயசூரியன்” என முழக்கங்கள் முழங்க, பரப்புரை உற்சாகமாக நடைபெற்றது.
பரப்புரையின்போது குடிநீர் வசதி, சாலை மேம்பாடு, தெருவிளக்கு அமைப்பு, விவசாய நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகளை அவர் கேட்டறிந்தார். “வெற்றி பெற்றவுடன் இக்கோரிக்கைகளை முன்னுரிமையுடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.
இந்த பரப்புரையில் ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், இளைஞரணி, பெண்அணி பொறுப்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர். துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வீடு தோறும் ஆதரவு திரட்டப்பட்டது.
பரப்புரையின் நிறைவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“மக்களின் இந்த ஏகோபித்த ஆதரவு உதயசூரியன் சின்னத்தின் வெற்றியை உறுதி செய்கிறது. வளர்ச்சியும் நம்பிக்கையும் நிறைந்த பாப்பிரெட்டிப்பட்டியை உருவாக்குவது எங்கள் இலக்கு,” என்று தெரிவித்தார்.
மண்டல செய்தியாளர்:
தருமபுரி – சேலம் – கிருஷ்ணகிரி
D. ராஜீவ் காந்தி