விழுப்புரம், ஏப்ரல் 6:
விழுப்புரம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற 4½ கிலோ தங்க நகை கொள்ளை வழக்கில் தொடர்புடைய இருவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த மார்ச் 3, 2026 அன்று, விழுப்புரம் பெருமாள் கோவில் தெருவில் நகை தொழிலாளி ராஜமாணிக்கம் என்பவரிடம் இருந்து சுமார் 4½ கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து, நீதிமன்ற காவலில் வைத்திருந்தனர்.
இந்த நிலையில், வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, சாய் பிரனீத் IPS, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் பேரிலும், ஷேக் அப்துல் ரகுமான் IAS, மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின்படியும், இருவரும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள்:
சுரேந்தர் (22), ஞானமூர்த்தி மகன், அன்னை இந்திரா நகர், மணவேலி, புதுச்சேரி
கந்தசாமி @ அரிகிருஷ்ணன் (28), முருகன் மகன், கணேஷ் நகர், முத்தியால்பேட்டை, புதுச்சேரி
இருவரும் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சக்திவேல் விஜயன், விழுப்புரம் மாவட்ட கிரைம் செய்தியாளர்