Fri. Apr 3rd, 2026

குடியாத்தம், ஏப். 2:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற (தனி) தொகுதியில் நடைபெறவுள்ள பொது தேர்தலை முன்னிட்டு, சுயேட்சி வேட்பாளராக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சுப்பிரமணி (வயது 82) அவர்கள் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வேலூர் மாவட்டம் தொரப்பாடியைச் சேர்ந்த இவர், இன்று காலை குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் அலுவலரான சுபலட்சுமி அவர்களிடம் அதிகாரப்பூர்வமாக மனு தாக்கல் செய்தார்.

இந்நிகழ்வில் உதவி தேர்தல் அலுவலர் சந்தோஷ் மற்றும் பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

குறிப்பாக, சுப்பிரமணி அவர்கள் இதற்கு முன் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், விக்கிரவாண்டி, கே.வி.குப்பம் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்த அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்


By TN NEWS