Fri. May 29th, 2026

📍 குடியாத்தம் | 📅 மார்ச் 31

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் ஜி. பரிதா புருஷோத்தமன் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

குடியாத்தம் நகரம் செதுக்கரை 15வது வார்டு பகுதியில், வீதி வீதியாகச் சென்று பொதுமக்களை நேரடியாக சந்தித்து, இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கோரினார். மக்கள் மத்தியில் உற்சாகமான வரவேற்பு காணப்பட்டது.

இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் தென்றல் குட்டி தலைமையிலான கழக நிர்வாகிகள் மற்றும் 15வது வார்டு நிர்வாகிகள் இணைந்து செயல்பட்டனர்.

மேலும், நகர கழக செயலாளர் ஜே.கே.என். பழனி, 15வது வார்டு கழக செயலாளர், வழக்கறிஞர் இளங்கோ உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

✍️ செய்தி: கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம்


By TN NEWS