Thu. Feb 12th, 2026

குடியாத்தம் | மக்கள் செய்தி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அ.தி.மு.க.) வேலூர் புறநகர் மாவட்டம், குடியாத்தம் நகர கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் பிப்ரவரி 11-ஆம் தேதி புதன்கிழமை காலை 11.00 மணியளவில், ஆர்.எஸ்.ரோடு பிஏடிசி டிப்போ எதிரே உள்ள ஸ்ரீ வைஷ்ணவி மஹாலில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு நகர கழக செயலாளர் ஜே.கே.என். பழனி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக த. வேலழகன், வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் கலந்து கொண்டு, வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பூத் கமிட்டி செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவான ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும், கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்த 10 தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரம் பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணைச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், வார்டு கழகச் செயலாளர்கள், சார்பணி செயலாளர்கள், பூத் செயலாளர்கள், புக் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் இறுதியில் மாவட்ட பிரதிநிதி எம்.கே. சலீம் நன்றியுரை கூறினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS