நினைவேந்தல் நிகழ்வு:
வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகரில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் C.N.அண்ணாதுரை அவர்களின் 57-வது நினைவு நாள் இன்று (பிப்ரவரி 3) காலை 9.30 மணியளவில் மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது.
மாலை அணிவித்து மரியாதை:
காமராஜர் பாலம் அருகே அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு, குடியாத்தம் நகர அதிமுக செயலாளர் ஜே.கே.என். பழனி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பங்கேற்றோர்:
நிகழ்வில் கஸ்பா ஆர். மூர்த்தி, எஸ். அமுதா, சிவப்பிரகாசம், ஏ. ரவிச்சந்திரன், எம். பாஸ்கர், எம். பூங்கொடி, மூர்த்தி, அமுதா, கருணா, எஸ்.என். சுந்தரேசன், எஸ்.ஐ. அன்வர் பாஷா, எம்.கே. சலீம், ஆர். அட்சயா, வினோத்குமார், ஜி. தேவராஜ், ஆர்.கே. மகாலிங்கம், எஸ்.டி. மோகன்ராஜ், எல்.ஏ. அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் நகர மன்ற உறுப்பினர்கள் லாவண்யா, குமரன், ரேவதி, மோகன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, வார்டு கழக நிர்வாகிகள், சார்பணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்
