தர்மபுரி | ஜனவரி 8
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் 2 கோடியே 22 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கம் வழங்கும் திட்டத்தை, மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (08.01.2026) தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, தர்மபுரி மேற்கு மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி மத்திய ஒன்றியம் மோளையானூர் கிராமத்தில் உள்ள நியாயவிலை கடைகளில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் முனைவர் P. பழனியப்பன் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புகளை வழங்கினார்.
நிகழ்வில்,
பாப்பிரெட்டிப்பட்டி மத்திய ஒன்றிய கழக செயலாளர் சி. முத்துக்குமார்,
கழக தலைமை செயற்குழு உறுப்பினர் சித்தார்த்தன்,
முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் இராசு. தமிழ்செல்வன்,
கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மண்டல செய்தியாளர் : D. ராஜீவ் காந்தி