Sat. Jan 10th, 2026

குடியாத்தம், ஜனவரி 4:

வேலூர் மாவட்டம், பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் 3241-H மாவட்டத்திற்குட்பட்ட குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கம் மற்றும் சென்னை வானகரம் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து, இன்று காலை மாபெரும் இதயம் பொதுமருத்துவ முகாமை நடத்தின.

இந்த மருத்துவ முகாமிற்கு குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கத் தலைவர் திரு. பி.எஸ். ரவீந்திரன் தலைமை தாங்கினார்.
செயலாளர் திரு. ஜி. பாபு மற்றும் பொருளாளர் திரு. ஆர். அவிநாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமை மாவட்ட தலைவர் டாக்டர் எம்.கே. பொன்னம்பலம் மற்றும் சாசனத் தலைவர் திரு. உதயகுமார் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

🫀 மருத்துவ பரிசோதனைகள்:

இந்த முகாமில்,

இதய நோய் கண்டறிய ECG (Electrocardiogram)

Cardiogram

ரத்த சர்க்கரை அளவு,

ரத்த அழுத்தம்

ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, டாக்டர்கள் மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.

இதில்,

65 பேருக்கு ECG பரிசோதனை,
45 பேருக்கு கார்டியோகிராம் பரிசோதனை
மேற்கொள்ளப்பட்டதுடன், பிற நோய்களுக்கான ஆரம்ப கண்டறிதலும் செய்யப்பட்டது.

முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

👥 பங்கேற்றோர்:

இந்த நிகழ்ச்சியில்,

லயன்ஸ் சங்க நிர்வாகிகள் ஏ. காசி விஸ்வநாதன், டாக்டர் என். வெங்கடேஸ்வரன், ஜே.ஜி. நாயுடு, ஆசிரியர் அருள் பிரகாசம், ஏ. சுரேஷ் குமார், கே. ஆறுமுகம், கருணாகரன், என்.எஸ். விவேகானந்தன், துரைசெல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

✍️ குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்:
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS