Fri. Dec 19th, 2025

சாலை பாதுகாப்பிற்காக பாண்டியராஜாவின் முன்முயற்சி.

தென்காசி:
மலையராமபுரம் விலக்கு பகுதிக்கு அருகே தென்காசி நோக்கி செல்லும் வாகனங்கள் வழி தவறிச் செல்வதைத் தவிர்க்கும் நோக்கில், எதிரொளிப்பான் பொருத்தப்பட்ட பெரிய அளவிலான இரண்டு பெயர் பலகைகள் தனிப்பட்ட செலவில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சமூக நல முயற்சியை மேற்கொண்டவர்:
தென்காசி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினரும்,
தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவருமான
திப்பணம்பட்டி பாண்டியராஜா.

வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக, இரவு நேரத்திலும் தெளிவாகத் தெரிவதற்காக உயர்தர எதிரொளிப்பானுடன் கூடிய இந்தப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்காக பாண்டியராஜா அவர்கள் மீது நன்றி மற்றும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தகவல் வழங்கியவர்:
அமல் ராஜ்
தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர்
தமிழ்நாடு டுடே

By TN NEWS