Wed. Nov 19th, 2025

வேலூர் மாவட்டம், குடியாத்தம் — நவம்பர் 18.

குடியாத்தம் அருகே காக்காதோப்பு பகுதியில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி சார்பில் 8வது தேசிய இயற்கை மருத்துவ தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு உரை;

இந்த நிகழ்ச்சியில் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினர்.

“விளையாட்டுடனும் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியோடும் படித்தால் உயர்ந்த மதிப்பெண்கள் பெற முடியும்” எனவும்,

“இயற்கை மருத்துவம் என்பது நோய் வருமுன் தடுத்திடும் மருத்துவம். எனவே யோகா, தியானம் செய்வது ஆரோக்கியமான வாழ்விற்கான முக்கியமான பாதை” எனவும் கூறினார்.

புதியதாக சேர்ந்த 6வது ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை ஆடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

கல்லூரி நிர்வாகத்தின் உரை:

அத்தி மருத்துவமனை தலைமை மருத்துவர் மற்றும் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் பெ. சௌந்தரராஜன்,
அத்தி குழும அறங்காவலர் டாக்டர் சௌ. சுகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவர்கள், “இயற்கை மருத்துவக் கல்வியை ஆழமாக கற்று, புதிய புதுமைகள் கொண்டுவர வேண்டும்; அது பொதுமக்களுக்கு நன்மை பயக்கும்” என தெரிவித்தனர்.

சிறப்பு விருந்தினர்கள்:

சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட

பேராசிரியர் மங்கையர்கரசி,

புதுச்சேரி கவிஞர் திரு. ஆலா
இயற்கை மருத்துவத்தைக் குறித்த பழமையான கவிதைகள் மூலம் நோய்களுக்கான மருந்து விளக்கங்களை வழங்கினர்.

மாணவர்கள் கலைநிகழ்ச்சி:

கருத்தரங்கத்திற்குப் பிறகு, இயற்கை மருத்துவ மாணவ–மாணவிகள் ஆடிய பரதநாட்டியம் விழாவை இன்னும் சிறப்பாக்கியது.

நினைவு பரிசுகள்:

அத்தி இயற்கை & யோகா மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் மகேஷ் ராஜாமணி அவர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
அத்தி செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் பால் ராஜ் சீனித்துரை, குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கா. குமரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேராசிரியர்கள், மருத்துவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் பங்கேற்றனர்.

கே.பி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுகா செய்தியாளர்.

By TN NEWS