Wed. Nov 19th, 2025


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்களவாய் கூட்டுச்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அவசர செயற்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு திமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் சேகர் அவர்கள் தலைமையேற்றார்.

கலந்து கொண்டு உரையாற்றியோர்:

மண்டல தேர்தல் பொறுப்பாளர் & தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம்

விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் & செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி மஸ்தான்


இருவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு முக்கிய உரைகளை வழங்கினர்.

அமைச்சர் MRK பேசுகையில்…

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் தனது உரையில் முக்கியமாக கூறினார்:

“SIR மூலமாகவே இந்த தேர்தல் பணிகளுக்கான துவக்கத்தை நாமே அமைத்துவிட்டோம்.
வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர்களை சேர்த்ததே நாங்கள் என்பதில் உரிமையுடன் மக்களிடம் வாக்கு கேட்கலாம்.”

“SIR பற்றி பொதுமக்கள் அறியாமல் இருந்தாலும், அதிகாரிகள் விண்ணப்பங்களை வாங்கத் தொடங்கி விட்டார்கள்.
பிறகு தான் அவர்களுக்கு பயிற்சி நடத்தப்படுகிறது.”

“பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்பாக செயல்பட்டால்தான் நமது ஆதரவாளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.”

“நமது கழகத்தினர் அனைவரும் ஒன்றுபட்டு வேகமாக வாக்காளர் பட்டியல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.”

“SIR வழக்கு உச்சநீதிமன்றத்தில் நவம்பர் 23-ற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதுவாக இருந்தாலும், நமது கட்சி பொறுப்புடன் பணிகளை செய்து முடிக்க வேண்டும்.”

“இதன் மூலமே 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறுவது நிச்சயம்” என அவர் உறுதியாக தெரிவித்தார்.

நிர்வாகிகள் பங்கேற்பு:

கூட்டத்தில் மாவட்ட, ஒன்றியம், நகர, கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு: வாக்காளர் பட்டியல் பணிகள், பிரிவு வாரியான பொறுப்புகள்,நிலை நிர்வாகிகளின் ஒருங்கிணைப்பு, போன்ற விடயங்களில் விரிவான ஆலோசனைகள் நடைபெற்றன.

ஒளிப்பதிவாளர்: கே. மாரி

விழுப்புரம் மாவட்டம்

By TN NEWS