Wed. Nov 19th, 2025



தேனி தெற்கு மாவட்டத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வரும் நவம்பர் 16ஆம் தேதி “உள்ளம் தேடி, இல்லம் நாடி – மக்களை தேடி மக்கள் தலைவன்” ரதத் தேர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதையொட்டி, அந்த சுற்றுப்பயணத்தை சிறப்பாக ஒருங்கிணைக்கவும், வரவேற்பு ஏற்பாடுகளை திட்டமிடவும் தேமுதிக தெற்கு மாவட்ட செயலாளர் M.A.செல்லத்துரை தலைமையில் ஆலோசனைக் கூட்டம் கம்பம் நகரில்  நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு அவைத்தலைவர் பி.காசிமாயன் முன்னிலை வகித்தார்.
தலைமை செயற்குழு உறுப்பினர் சி.அசோக், பொதுக்குழு உறுப்பினர் முகமது, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முருகன், உத்தமபாளையம் ஒன்றிய செயலாளர் ஞானமுத்து, கடமலை மயிலை தெற்கு ஒன்றிய செயலாளர் பரமராஜ், ஆண்டிபட்டி தெற்கு நகர செயலாளர் சதீஷ் கதிர்வேல், கடமலை வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், அவைத்தலைவர் வி.கண்ணன், ஒன்றிய செயலாளர் மாசாணம், துணைச் செயலாளர் மலைச்சாமி, சின்னமனூர் நகர கழக செயலாளர் MRS முருகன், கம்பம் தெற்கு நகர செயலாளர் குமரேசன், கம்பம் வடக்கு நகர செயலாளர் மணிவாசகம், பேரூர் கழக செயலாளர் முருகன், கண்டமனூர் பேரூர் கழகச் செயலாளர் தங்கப்பாண்டி, கேப்டன் மன்ற செயலாளர் சரவணன், துணைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், சின்னமனூர் நகர பொருளாளர் GS கணேசன், துணைச் செயலாளர் சுருளிகாந்த், உத்தமபாளையம் ஒன்றிய துணைச் செயலாளர் கண்ணதாசன், பொருளாளர் சங்கர பாண்டியன், துணைச் செயலாளர் ஆரோக்கியசாமி, கம்பம் வடக்கு அவை தலைவர் அமாவாசை, கம்பம் தெற்கு நகர துணைச் செயலாளர்கள் அழகர்சாமி, சிவபிரகாஷ், ஆண்டிபட்டி தெற்கு ஒன்றிய பொருளாளர் முருகவேல், கம்பம் நகர துணைச் செயலாளர் ஈஸ்வரன், வார்டு செயலாளர் ரவிக்குமார், மாவட்ட பிரதிநிதி மஸ்தான் அலி, சின்னமனூர் வார்டு செயலாளர்கள் வினோத், மணிமுத்து, துணைச் செயலாளர் UPS குமார், பொருளாளர் தென்றல் சுரேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தேனி தெற்கு மாவட்ட தேமுதிக அனைத்து கழக மற்றும் அணி நிர்வாகிகளும் பெருமளவில் பங்கேற்றனர்.

செய்தி & புகைப்படம்:
மு.அன்பு பிரகாஷ்,
தேனி மாவட்ட தலைமை புகைப்பட கலைஞர்

By TN NEWS