
மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள்
பாஞ்சாலங் குறிச்சியில் 03.01.1760 அன்று பிறந்து பாளையக் காரராக ஆட்சி புரிந்து உரிமைக்காக அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கயத்தாறில் 16.10.1799 அன்று தூக்குக் கயிறை முத்தமிட்டு வீரமரணம் எய்தினார். அவரின் 227 வது வீரவணக்க நாள் இன்று.

இவரது வாழ்க்கை சரித்திரம்:
வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் 1760 ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தார். இவரது பெற்றோர் திக்விஜய கட்டபொம்மன் நாயக்கர் மற்றும் ஆறுமுகத்தம்மாள் என்பவர்கள். தெலுங்கு மொழியை பேசும் ராஜகம்பளம் நாயக்கர் வம்சத்தவர்கள் இவர்கள். பாளையக்காரராக ஆட்சி செய்த சரித்திரப் பின்புலத்தில், ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக தன்னிடம் இருந்த சிறிய பாளையத்திலிருந்தே பெரும் முடிவுடன் போராடினார்.
வாழ்க்கை மற்றும் பணி:
🎈கட்டபொம்மன் ஒரு குறுநில மன்னனாக, தனது வம்சத்தை முன்னோர்களிடமிருந்து பெற்றார்.
🎈ஜக்கம்மா என்றவரை காதல் செய்து திருமணம் செய்தார்; குழந்தை இல்லை, இருவரும் ஒற்றுமயுள்ள இல்லற வாழ்க்கையை வாழ்ந்தனர்.
🎈பாளையக்காரர் என்ற முறையில் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்டார், பிரித்தானிய அரசின் வரி நிதி முறைக்கு எதிராக குரல் கொடுத்து எதிர்ப்பு தெரிவித்தார்.
🎈ஆங்கிலேய அரசுக்கு எதிராக காலையில் ஆரம்பித்த போராட்டங்கள் பல கட்டங்களில் நடந்தன. இறுதியில் 1799 அக்டோபர் 16ஆம் தேதி கயத்தாறில் தூக்கில் போடப்பட்டு வீர மரணம் அடைந்தார்.
வாரிசுகள் மற்றும் பாரம்பரியம்:
📌பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் சாகசங்கள் மற்றும் அவரின் தியாக பணிகள் பெருமைக்கும் பாராட்டிற்கும் உரியவை[3].
📌தமிழகத்தில் அந்நிய ஆட்சிக்கு எதிராக முதன்முதலில் முயற்சி எடுத்த முதன்மை வீரர்களில் ஒருவர் என்ற பெருமை பெற்றார்[1].
கட்டபொம்மன் தமிழர்களின் விடுதலை மற்றும் தன்னாட்சி அருவாய் போராளராக என்றும் நினைவு கூறப்படுகிறார்.
1790 இல் கட்டபொம்பன் பாளையக்காரர் ஆனார். 1792 ஆம் ஆண்டு.
1790 இல் கட்டபொம்பன் பாளையக்காரர் ஆனார். 1792 ஆம் ஆண்டு கர்நாடக ஒப்பந்தத்தின் மூலம் பாளையக்காரர்களை நிர்வகிக்கும் அதிகாரத்தை ஆர்காட்டு நவாப் ஆங்கிலேயருக்குக் கையளித்தார்.
திருநெல்வேலி மாவாட்ட கலெட்டர் காலின் ஜாக்சன் கப்பம் கேட்டும், பின்னர் கப்பம் கட்டாமைக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறும் வீரபாண்டிய கட்டபொம்மனுக்குக் கடிதம் அனுப்பினார். இதை முதலில் புறக்கணித்த கட்டபொம்மன், பின்னர் ஜாக்சனை சந்திக்க 23 நாட்களில் 400 மைல்கள் சுற்றி அலைந்த பிறகு ஜாக்சனை இராமநாதபுரம் அரண்மனையில் செப்டம்பர் 20 ஆம் நாள் சந்தித்தார்.
வீரபாண்டிய கட்டபொம்மனை மரியாதைக் குறைவாக நடத்தியதுடன் அவரைக் கைது செய்யவும் ஜாக்சன் உத்தரவிட்டார். கட்டபொம்மன் தன் உடன் வந்தவர்களுடன் தாக்குதல் நடந்தித் தப்பிச் செல்லும்போது, வாயிலில் ஏற்பட்ட மோதலில் லெப்டினன்ட் கிளார்க் கொல்லப்பட்டார்.
1799 இல் கட்டபொம்மன் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் பாளையக்காரர்களை அணிதிரட்டினார். இந்த அமைப்பு ‘திருநெல்வேலி கூட்டமைப்பு‘ ஆகும் 1799 செப்டம்பர் 5 ஆம் நாள் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை கைப்பற்ற மேஜர் பானர்மேன் தலைமையில் ஆங்கிலயப்படை பீரங்கித்தாக்குதலைத் தொடங்கியது, மண் கோட்டை ஒரு பகல் முழுவதும் தாக்குபிடித்தது. பிளவுற்ற தெற்கு வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்ற ஆங்கிலேயப்படை தளபதி காலின்சு வெள்ளையத் தேவனால் கொல்லப்பட்டார்.
கோட்டையை விட்டு வெளியேறி திருக்காளம்பூர் காடுகளில் மறைந்து கொண்ட கட்டபொம்மனை புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டைமான் ஆங்கிலேயருக்குப் பிடித்துக் கொடுத்தார். அக்டோபர் 16 ஆம் நாள் ,மேஜர் பானர்மேன் கட்டபொம்மன் மீது குற்றம் சுமத்தி விசாரணை நடத்தித் தூக்குத்தண்டனை விதித்தார்.
அக்டோபர் 16 -அன்று கயத்தாறு என்னுமிடத்தில் உறுதியையும் வீரத்தையும் வெளிப்படுத்திய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார் .
தொகுப்பு கட்டுரை:
சேக் முகைதீன். 
இணை ஆசிரியர்.
தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம்.
