Thu. Nov 20th, 2025

குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலக நுழைவாயிலில் அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் அரசு துறை அதிகாரிகளை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

அக்டோபர் 14

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் 31 வார்டுகளை கொண்ட ஒரு ஊராட்சி ஒன்றியமாகும்

இந்த 31 வார்டுகளிலும் அதிமுக திமுக பாமக உள்ளிட்ட கட்சி சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் சிறப்பு ஆலோசனை கூட்டம் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த கூட்டத்திற்கு துறை சார்ந்த அதிகாரிகள் யாரும் வராத நிலையில் ஆத்திரமடைந்த கவுன்சிலர்கள் திமுகவை சேர்ந்த ஒன்றிய குழு பெருந்தலைவர் சத்யானந்தம் அதிமுக சேர்ந்த ஒன்றிய குழு துணை தலைவர் அருண் முரளி தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலக நுழைவாயிலில் 20க்கும் மேற்பட்ட கவுன்சிலர்களுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்  தகவல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் குடியாத்தம் போலீசார் கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் கலைந்து சென்றனர் இதனால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது


குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

By TN NEWS