Thu. Nov 20th, 2025



வேலூர் மாவட்டம், குடியாத்தம், அக்டோபர் 11:
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, குடியாத்தம் தாலுகா வளத்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுக எஸ். நிர்மலா சேட்டு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்களது பகுதிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்று, அவற்றை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் எஸ். பிரியா சக்திவேல், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பல அரசு துறைகளின் அலுவலர்கள், பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர் ஆர். விஜயேந்திரன், ஊராட்சி செயலாளர் ஆர். ரேவதி, அரசு பள்ளி பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் இணை இயக்குநர், சமூக சேவகர் இ. சேகரன், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.

செய்தி: கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுகா செய்தியாளர்

By TN NEWS