📍 திருப்பூர், அக்டோபர் 9
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மின்பகிர்மான வட்டத்திலுள்ள தாராபுரத்தில், தற்காலிக மின்சார இணைப்பை நிரந்தர இணைப்பாக மாற்றிக் கொடுக்க ரூ.3,000 லஞ்சம் பெற்றதாக மின்வாரிய வணிக ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
லஞ்ச ஒழிப்பு துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், தாராபுரம் பகுதியில் பணியாற்றி வந்த மின்வாரிய வணிக ஆய்வாளர் ஜெயக்குமார் (56) என்பவர், மின்சார இணைப்பை மாற்றி வழங்க ரூ.3,000 லஞ்சம் கோரி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்தி வந்த சோதனையில் ஜெயக்குமார் கையும் களவுமாக பிடிபட்டார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📰 செய்தி: சரவணகுமார்