“விஜய்யை கூட்டணியில் சேர்க்க வேண்டாம்… கரூர் விவகாரத்தை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது” என தலைமை முடிவு எடுத்ததாக வட்டாரத் தகவல்!
🔶 சென்னை, அக்.10 ✍️
தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வளர்ச்சி கட்சி (த.வெ.க.) பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், திமுகவின் வலுவான கூட்டணியை எதிர்கொள்ள பா.ஜ.க. விஜய்யை தங்கள் கூட்டணியில் சேர்க்க தீவிர முயற்சிகள் மேற்கொள்கிறது என்ற செய்தி பரவியுள்ளது.
ஆனால், அ.தி.மு.க. தலைமையினர் இதற்கு முற்றிலும் மாறுபட்ட கணக்கு ஒன்றை வகுத்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“விஜய்யை இப்போதே கூட்டணியில் சேர்த்தால், நாளை நமக்கே தலைவலி!”
என்பதே அதிமுக தலைமையின் மறைமுக யோசனை என கூறப்படுகிறது.
♟️ “கரூர் விவகாரம் விஜய்யை சோர்வடையச் செய்துள்ளது”
சமீபத்திய கரூர் விவகாரம் விஜய்யின் அரசியல் பயணத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியான வழக்குகள், விமர்சனங்கள் மற்றும் ஊடகத் தாக்குதல்களால் விஜய் சோர்வடைந்துள்ளார் என்பதே அதிமுக மதிப்பீடு.
அதிமுக வட்டாரங்கள் கூறுவது:
“ஆரம்ப சவால்களிலேயே திணறும் ஒருவரை கூட்டணியில் சேர்க்க வேண்டிய அவசியமில்லை.
அவரை தனியாக விட்டால், அவரால் அரசியலின் கடின சோதனைகளை சமாளிக்க முயற்சிகள் எடுப்பார். அதுவே அவரை தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.”
♞ “விஜய் வளர்ந்தால் அதிமுக மூன்றாவது இடத்துக்கு!”
அதிமுக தலைமையின் அச்சம் — விஜய் வளர்ந்து விடுவாரோ என்பதே!
“விஜய்யை கூட்டணியில் சேர்த்தால், வெற்றி பெற்ற பிறகு அதன் முழுப் பெருமையும் அவருக்கே உரித்தான வெற்றி என மாயையை உருவாக்கி விடுவார்கள்.”
அவர் தன்னை ‘மாற்று சக்தி’ என நிரூபித்தால், அடுத்த தேர்தலில் திமுகக்கு எதிராக த.வெ.க. எழுந்துவிடும்.
அப்போது அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் அபாயம் உண்டு.”
இதனால், விஜய்யை இப்போதே கூட்டணியில் சேர்ப்பது அரசியல் தற்கொலை என அதிமுக தலைமை கருதுகிறது.
♜ “தனியாக களம் கண்டால்…? வெற்றி – தோல்வி சதவிகிதம் புரிந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு!”
அதிமுக வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன:
“கரூர் விவகாரம் போன்ற தொடக்க சவால்களிலேயே விஜய் தளர்ந்துள்ளார்.
அவர் தன்னிச்சையாக செயல்படுவது நல்லது . வெற்றி அடைய முடியாவிட்டால், தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு உள்ளது.”
இந்த வியூகம் மூலம் அதிமுக, விஜய்யை தங்கள் அரசியல் சதுரங்கத்தில் ஒரு “புதிய காய்ச்சல்” எனக் கருதி, அவசியமில்லாமல் பாதுகாக்க வேண்டாம் என்பதையே வலியுறுத்துகிறது.
♛ “மூன்றாவது சக்திக்கு இடமில்லை” – அதிமுக உறுதி:
தமிழக அரசியலில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. எனும் இரு துருவங்கள் கடந்த அரை நூற்றாண்டாக ஆட்சி மாற்றிக் கொண்டே வருகின்றன.
இதற்கிடையில் பல புதிய சக்திகள் – குறிப்பாக விஜயகாந்தின் தேமுதிக – தொடக்கத்தில் எழுச்சி கண்டாலும், பின்னர் சுருங்கிப்போனது.
அதேபோல, விஜய்யின் த.வெ.க. கட்சியும் அதே குழலில் சிக்கி பலவீனப்படும் என்றே அதிமுக தலைமையின் நம்பிக்கை என்று நம்பப்படுகிறது
“விஜய் தனியாக களத்தில் அரசியல் செய்தால், அவரால் அரசியலில் நீண்டகாலம் நிலைத்திருக்க முடியாது.
அப்போதுதான் திமுக–அதிமுக இருதுருவ அரசியல் நிலை உறுதியாகும்.”
🧩 எதிர்பார்ப்பு:
விஜய்யின் அரசியல் பயணம் தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளது.
கரூர் விவகாரம் அவருக்கு சவாலாக இருந்தாலும், அதிலிருந்து மீண்டு வருவது அவரின் அரசியல் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் அதிகம்.
அவரால் சவால்களை சமாளித்து தன்னிலை பெற முடியுமா?
அல்லது அரசியலில் இருந்து பின்வாங்க வேண்டிய நிலை ஏற்படுமா?
அதற்கான பதில் வரும் காலங்களில் வெளிப்படும்.
🖋️ சேக் முகைதீன்
இணை ஆசிரியர்.
