Wed. Jan 14th, 2026


பரதராமி பகுதியில் ஆவின் சார்பில் நடைபெற்ற சிறப்பு கால்நடை முகாம்

குடியாத்தம், அக்டோபர் 8:
வேலூர் மாவட்ட கலெக்டர் திருமதி சுப்புலட்சுமி அவர்களின் உத்தரவின் பேரில், குடியாத்தம் அருகே உள்ள பரதராமி வி.எஸ்.புரம் பகுதியில், தமிழ்நாடு அரசு பால்வளத்துறை சார்பில் இலவச மலட்டுத்தன்மை நீக்கும் மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.

இம்முகாம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் வேலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம் இணைந்து “இராஷ்ட்ரிய கோகுல் மிஷன்” திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது.

முகாமில் பசு மாடுகளுக்கு மலட்டுத்தன்மை நீக்கும் சிகிச்சை, ஊசிகள், மருந்து மாத்திரைகள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.

பரதராமி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு உரிமையாளர்கள் தங்களது மாடுகளை கொண்டு வந்து சிகிச்சை அளித்தனர்.

முகாமிற்கு வேலூர் ஆவின் உதவி பொது மேலாளர் விடியாமார்க்கேரேட் தலைமையேற்றார்.
மேலாளர் நரசிம்மன் முன்னிலை வகித்தார்.

விரிவாக்க அலுவலர்கள் நாகராஜன், சுரேஷ்குமார் ஆகியோர் வரவேற்பு செய்தனர்.
ஆவின் கால்நடை மருத்துவர் சிவசங்கரன் மற்றும் அன்பு ஆகியோர் மாடுகளுக்கு ஊசி செலுத்தி மருந்து மாத்திரைகள் வழங்கினர்.

🖋️ செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்
📍இடம்: குடியாத்தம்

By TN NEWS