Mon. Oct 6th, 2025



குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் முன்னெடுப்பு

வேலூர் மத்திய மாவட்டம், குடியாத்தம்:
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இணைந்து நடத்தி வரும் வாக்குத் திருட்டு மற்றும் ஜனநாயக விரோத செயல்பாடுகளை கண்டித்து, வேலூர் மத்திய மாவட்டம் குடியாத்தம் நகர, வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று (05.10.2025) ஞாயிற்றுக்கிழமை மாலை குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் துவக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.
குடியாத்தம் நகர காங்கிரஸ் கமிட்டி பொறுப்புக் குழு உறுப்பினர்கள் விஜயேந்திரன், சரவணன், யுவராஜ், இலியாஸ் பாஷா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
டாக்டர் நவீன் பிரபு அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்வில் வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் திருமதி கிருஷ்ணவேணி ஜலந்தர், மாவட்ட பொதுச் செயலாளர் பாரத் நவீன்குமார், பேரணாம்பட்டு நகர தலைவர் முஜம்மில் அஹ்மத், பள்ளிகொண்டா பேரூர் தலைவர் அக்பர் பாஷா, RGPRS மாவட்ட தலைவர் ஆனந்தவேல், பள்ளிகொண்டா பேரூர் பொருளாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

மேலும் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் தனசேகரன், தாண்டவமூர்த்தி, வட்டார பொறுப்பாளர் ஆரோன், மாவட்ட எஸ்ஸி பிரிவு தலைவர் அன்பரசன், மாவட்ட ஓபிசி பிரிவு தலைவர் ராகேஷ், மாநில எஸ்ஸி பிரிவு பொதுச் செயலாளர்கள் சுரேஷ், சுப்பிரமணி, காத்தவராயன், மாநில ஓபிசி பிரிவு பொதுச் செயலாளர் பொறியாளர் சுனில், RGPRS மாநில துணைத்தலைவர் ராஜசேகரன், மகளிர் காங்கிரஸ் சார்பில் பாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்வில் சத்தியமூர்த்தி, மனோகரன், மணிவேல், ரஜினிகாந்த், ஸ்டாலின், புஷ்பாகரன், ஜலந்தர், மன்னன், முனுசாமி உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிவில் குடியாத்தம் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீராங்கன் நன்றியுரை வழங்கினார்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS