ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு – மக்கள் பிரதிநிதிகள் மனது வைத்தால் சாத்தியம்:
சென்னை:
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரயில் பாதை திட்டங்கள் ஆண்டாண்டு காலமாக காத்திருப்பில் உள்ளன. புதிய ரயில் பாதைகள் அமைக்க வேண்டும் என்ற மக்கள் கோரிக்கைகள் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டும், அவற்றில் பல இன்னும் நிறைவேறவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் புதிய ரயில் பாதைகள் தொடர்பான திட்டங்கள் அறிவிக்கப்பட்ட பிறகும், அவை மண்ணில் இறங்குவதற்கு அரசியல் மன உறுதி இல்லாததே தடையாக உள்ளது. ரயில் பயணிகள் பாதுகாப்பாகவும் விரைவாகவும் பயணிக்க, பொருளாதார வளர்ச்சிக்கு உதவவும், புதிய பாதைகள் அவசியமாகின்றன என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
நிறைவேறாமல் நிற்கும் பாதை திட்டங்கள்:
2006ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட மதுரை – தருமபுரி பாதை, 2017ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட சேலம் – ஹொசூர் திட்டம், 2021ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட கரூர் – ஈரோடு பாதை உள்ளிட்டவை இன்னமும் செயல்படுத்தப்படவில்லை. தமிழகத்தின் பல பகுதிகளில் புதிய பாதை தேவை என்ற மக்கள் கோரிக்கைகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.
இதனுடன் சேர்த்து மதுரை – செங்கோட்டை – திருநெல்வேலி பகுதிகளில் இரண்டாம் பாதை அமைப்பும், கடலூர் – பாண்டிச்சேரி – திண்டிவனம் திட்டங்களும் அரசின் பின் தள்ளிப்போன திட்டங்களாக உள்ளன.
திட்டங்கள் நின்றுவிட காரணம்:
நிதி ஒதுக்கீடு குறைவு, நிலம் கையகப்படுத்துவதில் தாமதம், அரசியல் முடிவுகள் இல்லாமை போன்றவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. மத்திய அரசு தரப்பில் போதுமான நிதி வந்தாலும், மாநில அரசு தேவையான ஒத்துழைப்பை தராதது காரணமாக பாதை திட்டங்கள் கைவிடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
மக்கள் நம்பிக்கை:
புதிய ரயில் பாதைகள் அமல்படுத்தப்பட்டால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும், சுற்றுலா வளர்ச்சி ஏற்படும், தொழில்துறை முன்னேற்றம் சாத்தியமாகும் என மக்கள் நம்புகிறார்கள். அதனால் மக்களின் பிரதிநிதிகள் நேரடியாக மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தினால் திட்டங்கள் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரயில் பயணிகளின் எதிர்பார்ப்பு:
தமிழகத்தில் பல்வேறு ரயில் பாதைகள் பற்றிய திட்டங்கள் இன்னும் காகிதத்தில் மட்டுமே உள்ளது. ஆனால், அரசியல் விருப்பம், மக்கள் மனதில் உள்ள எதிர்பார்ப்பு, பொருளாதார முன்னேற்றத் தேவைகள் ஆகியவை ஒன்றிணைந்தால், புதிய ரயில் பாதைகள் விரைவில் உயிர்ப்புடன் அமையும் என்பதில் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
சேக் முகைதீன்
இணை ஆசிரியர்.