Sun. Oct 5th, 2025



நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம்:
கரூரில் சமீபத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தனர். அவர்களின் ஆத்மா சாந்தியடைய, விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் அம்பாசமுத்திரத்தில் நேற்று அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

அஞ்சலி நிகழ்ச்சி:

அம்பாசமுத்திரம் கல்யாணி தியேட்டர் முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மோட்ச தீபம் ஏற்றப்பட்டு, புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கலந்து கொண்டவர்கள்:

இந்த நிகழ்ச்சியில்,

விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் எம். எஸ். கண்ணன் தர்மாச்சார்யா பிரமுக்

மாவட்ட அமைப்பாளர் பரமேஸ்வரன்

மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து

பாஜக திருநெல்வேலி வடக்கு மாவட்ட துணை தலைவர் லக்ஷ்மண ராஜா

மத்திய அரசு நோட்டரி பப்ளிக் ராம்ராஜ் பாண்டியன்

மண்டல தலைவர் உதயகுமார்

மண்டல துணை தலைவர் மித்ராதேவா

வழக்கறிஞர் பிரிவு அம்பை நகர தலைவர் பட்டமுத்து

மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலாஜி

நகர பொருளாளர் முத்துவருணன்

சமூக ஊடக பிரிவு சினீவாசன்

வியாபாரிகள் சங்க தலைவர் ராமசாமி தாஸ்

இந்து முன்னணி நகர தலைவர் கோபி

RSS கார்த்திக்

விசுவ ஹிந்து பரிஷத் அம்பாசமுத்திரம் ஒன்றிய செயலாளர் சசிகுமார்

துணை செயலாளர் நம்பிராஜன்

நகர தலைவர் ராமசாமி

நகர செயலாளர் காளிராஜ்

வள்ளிநாயகம், ரமேஷ், மாரியப்பன், குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


பொதுமக்களின் பங்கேற்பு:

பெரும்பாலான பொதுமக்களும் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினர்.

அமல்ராஜ்
தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்

By TN NEWS