Sun. Oct 5th, 2025




வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் துறை ஊழியர்கள் இன்று (செப்டம்பர் 25) மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜீவரத்தினம் தலைமையேற்றார். கிராம உதவியாளர் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் முன்னிலை வகித்தார்.

ஸ்டாலின் திட்ட முகாமில் அளிக்கப்படும் மனுக்களை விசாரிக்க போதிய கால அவகாசம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் சசிகுமார், செந்தில் அருள் பிரகாசம், காந்தி, ரமேஷ், பெரியசாமி மற்றும் கிராம உதவியாளர்கள் மணிகண்டன், வசந்தகுமார், பிரகாசம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

✍️ குடியாத்தம் தாலுகா செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS