Sun. Oct 5th, 2025



திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையம் | 23.09.2025

சம்பவம்:
திருவெண்ணெய்நல்லூர் ஆமூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மனைவி அஞ்சாயிரம் (60), OAP மற்றும் நூறு நாள் வேலையில் சம்பாதித்து வைத்திருந்த ரூ.14,500 பணத்தை வங்கியிலிருந்து எடுத்துக்கொண்டு வரும் வழியில் தவறவிட்டார்.

காவல் நடவடிக்கை:
திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் அழகிரி, முதல் நிலை காவலர்கள் பழனி மற்றும் அய்யனார் தலைமையில், சம்பந்தப்பட்ட சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து பணத்தை குறைந்த நேரத்தில் கண்டறிந்து மீட்டனர்.

முடிவு:
பணம் மீட்டு ரூ.14,500 மூதாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. மூதாட்டி கண்ணீர் மல்க காவல் துறைக்கு நன்றி தெரிவித்தார்.

செய்தியாளர்:
V. ஜெய்ஷங்கர்
மாவட்ட முதன்மை செய்தியாளர், கள்ளக்குறிச்சி மாவட்டம்

By TN NEWS