குடியாத்தம் ஒன்றியம் கொல்லமங்கலம் பள்ளிக்குப்பம் ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் – செப்டம்பர் 25:
குடியாத்தம் வட்டம், கொல்லமங்கலம் பள்ளிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி மக்களின் அடிப்படை வசதிக்கான கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காணும் நோக்கில், “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது.
வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம் குமார் சரவணன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
பொதுமக்கள் வழங்கிய மனுக்களில், மகளிர் உரிமை தொகை, முதியோர் ஓய்வூதியம், குடும்ப அட்டை, இலவச வீட்டு மனை பட்டா, பெயர் மாற்றம், மின்சாரம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றன.
முகாமில் தாசில்தார் பழனி, கொல்லமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கோபி, பள்ளிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், மாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆனந்தி முருகானந்தம், ஒன்றிய குழு உறுப்பினர் சரோஜா பர்குனம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கொல்லமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர்கள் விஷ்ணுபதி, வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்