குடியாத்தத்தில் புதிய நீதி கட்சி நிறுவனர் தலைவர் ஏ.சி. சண்முகம் பிறந்தநாள் அன்னதானம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம், செப்டம்பர் 25:
புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி. சண்முகம் அவர்களின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் மதியம் 12 மணியளவில் அன்னதான விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் கைத்தறி காவலன் எஸ். ரமேஷ் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் பி. சரவணன் முன்னிலை வகித்து அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் ஆர்.பி. செந்தில், பாஜக நகர தலைவர் ஜெகன், திருவிக்கா மாவட்ட செயலாளர் ஆர்வி. மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், புதிய நீதி கட்சி பொறுப்பாளர்கள் பாரத் மகேந்திரன், கோடீஸ்வரன், சசிகுமார், ராஜ்குமார், வெங்கடேசன், ஹரிபாபு, பெயிண்ட் செந்தில், கன்னியப்பன், திருநாவுக்கரசு, ஹேமந்த் குமார், பார்த்திபன், LIC சிவா, பாலாஜி, மோகன் ஆகியோரும் பலர் கலந்து கொண்டு அன்னதானத்தில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வை குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி. ராஜேந்திரன் செய்தியாக வெளியிட்டுள்ளார்.