சிறுமியை கர்ப்பமாக்கியவரை விடுவிக்க ₹50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மகளிர் இன்ஸ்பெக்டர் கைது
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அனைத்துமகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வீரம்மாள் (50), லஞ்சம் பெற்றதாக ஊழல் தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
🔹 காரிமங்கலம் அருகே தும்பலஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அதே ஊருக்கார வாலிபருடன் காதல் திருமணம் செய்து கொண்டிருந்தார். பின்னர், அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது.
🔹 இந்த விவகாரம் குறித்து சமூகநலத்துறை அலுவலர் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் வீரம்மாள் விசாரணை நடத்தினார்.
🔹 சிறுமியை திருமணம் செய்து வைத்ததால் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வேன், ₹50 ஆயிரம் கொடுத்தால் வழக்கை கைவிடுவேன் என பெற்றோரிடம் கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சிறுமியின் தாய் புகார் அளித்ததை அடுத்து, ஊழல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. நாகராஜன் தலைமையிலான குழு, ரசாயனம் தடவிய நோட்டுகளுடன் சிக்கவைத்து, லஞ்சம் வாங்கிய தருணத்தில் வீரம்மாளை கைதாக செய்தது.
கைது செய்யப்பட்ட வீரம்மாள் தருமபுரி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பசுபதி – செய்தியாளர்