Sun. Oct 5th, 2025



குடியாத்தம் Dr. M.K.P. ஹோமியோ கிளினிக், Nagarjuna Ayurvedaconcentrates Ltd., சுவாமி மெடிக்கல்ஸ் ஆகியவை இணைந்து, மாணவர்களின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் இலவச முகாம் இன்று காலை நடைபெற்றது.

இந்த முகாம் வரசக்தி விநாயகர் கோவில் அருகிலுள்ள பலம் நேர் சாலையில் நடைபெற்றது.
முகாமில் மருத்துவர் டாக்டர் பி. அபிராமி, B.H.M.S., கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கினார்.

இந்த முகாமில் குறிப்பாக +2 தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிப்பு, அதிக மதிப்பெண் பெறும் திறன், நினைவாற்றலை மேம்படுத்தும் பயிற்சிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

மொத்தம் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயனடைந்தனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்


 

By TN NEWS