Sun. Oct 5th, 2025



கடங்கனேரி ஊராட்சியில் உள்ள வெங்கடேஸ்வரபுரம் காமராஜர் திருமண மண்டபத்தில் “உங்களிடம் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது.

முகாமில் கடங்கனேரி ஊராட்சி தலைவர் அமுதா தேன்ராஜ், காடுவெட்டி ஊராட்சி தலைவர் முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் திவ்யா மணிகண்டன் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினராக திமுக மாவட்ட செயலாளர் ஜெயபால், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் சமுத்திர பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முகாமில் பொதுமக்களிடம் பட்டா பெயர் மாற்றம், சொத்து வரி, குடிநீர் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டு, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது.


அமல்ராஜ்

தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்.

 

By TN NEWS