Sun. Oct 5th, 2025




தென்காசி மாவட்டம் அருள்தரும் அன்னைகாந்திமதி அம்பாள் உடன் தொடர்புடைய திருக்கோயில் யானைகாந்திமதி, இயற்கை எய்திய தினம் கடந்த பத்தொன்பதாம் ஜனவரி 2025 அன்று நினைவிடத்தில் சிறப்பு பூஜை மற்றும் கல்யானை ஏற்பாடு செய்யப்பட்டது.

அருள்தரும் அன்னைகாந்திமதி அம்பாளுடன் தொடர்புடைய திருக்கோயில் யானைகாந்திமதி, கடந்த 12.1.2025 அன்று இயற்கை எய்தியதையடுத்து, திருக்கோயிலுக்குப் பின் தாமரைக்குளத்தில் ஈசானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

திருக்கோயில் அறங்காவலர் குழுவும், நிர்வாகமும் இணைந்து, அவரின் நினைவிடத்தில் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

அதன்பிறகு, முறைப்படி பூஜை செய்யப்பட்டு கல்யானை நிறுவப்பட்டது, பக்தர்களின் மனநிம்மதி மற்றும் பாரம்பரிய மரபு கடைபிடிக்கப்பட்டது.

அமல்ராஜ், தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்


 

By TN NEWS